வவுனியா - பொகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சரித்த நிர்மல புத்திக்க இந்திரபால ஆசியா 2018 பரா விளையாட்டில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 இன்று காலை வடமாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவிரத்தினாவின் மூன்றுமுறிப்பு அலுவலகத்திலிருந்து  அவரது பொகஸ்வெவ பகுதிக்கு வாகனப்பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஆசியா 2018 பரா விளையாட்டில் ஆசியாவில் நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் 200மீற்றர் ஓட்டத்தில் பிறன்ஸ் பதக்கத்தையும் உயரம் பாய்தலில் 5ஆவது இடத்தினையும் இந்தோனோஷியா, ஜகார்த்தாவில் இடம்பெற்ற போட்டியில் கலந்துகொண்டு இங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவரை கௌரவிக்கும் நிகழ்வில் கிராம மக்கள் கலந்துகொண்டு வாகனப்பேரணியாக  பொகஸ்வெவ   பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிப்புச் செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை கடந்த 2016ஆம் ஆண்டு டுபாயில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 100, 200 மீற்றர் ஓட்டம், உயரம் பாய்தலில் பங்கு பற்றி பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.