1000 ருபா அடிப்படை சம்பளம் கோரி ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நோட்டன் பிரதான வீதியை மறித்து கொடும்பாவியை எறித்தும் லெதண்டி  தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை போராட்டதில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது சுமார் 200 கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

குறித்த போராட்டமானது இன்று   காலை 08 மணி முதல் 10 மணிவரை இடம் பெற்ற நிலையில் இதன் போது ஹட்டன் நோட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து சிலமணி நேரம் தடைபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

குறித்த போராட்டத்தில்  ஈடுபட்ட மக்கள் தமக்கு ஆயிரம் ருபா அடிப்படை சம்பளம் வழங்கபட வேண்டும் என தெரிவித்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் சம்பளத்தினை அதிகரித்து  கொடுக்கும் அரசாங்கம் ஏன் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் ஏன் கவனம் செலுத்துவதில்லை என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி ஏழுப்பினர்.

இதேவேளை முதலாளிமார் சம்மேளனத்திற்கு தோட்;ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000ருபா வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திற்கு ஒப்படைக்கும் மாறும் ஆர்பாட்டத்த்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர் ஆரபாட்டத்தின் போது விஷேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கபட்டமை குறிப்பிடதக்கது