பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட  பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் கீழ் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் தெபுவன பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தன நேற்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவரது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவியளித்தமை குறிப்பிடத்தக்கது.