பிரபல சமூக வலைதளமான யூடியூப், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சற்றுமுன்னர் முடங்கியிருந்தது.

உலகம் முழுவதும் யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்ட முயற்சியினால் யூடியூப் இணையதளம் மீண்டும் வழமைக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.