அண்மையில் தெபுவன பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வு தொடர்பில் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தன இன்று (16) நண்பகல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

அவர் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவரது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கான உதவிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவியை அவருக்கு வழங்கினார்.