துருக்­கி­யின் வட­கி­ழக்கு பகுதியி­லுள்ள  அர்ஸ்­லான்ஸா என்ற கிராம மக்கள்  கடந்த 300 ஆண்­டுகள் பயண்படுத்தி வந்த   பழ­மை­யான பால­மொன்று காணா­மற்­போ­யுள்­ள­தாகக் தெரிவித்துள்ளனர்.

புதையல் தேடும் கொள்­ளை­யர்­களால் குறித்த வளை­வுப்­பாலம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என அர்ஸ்­லான்ஸா கிராம மக்கள் அச்­சமடைந்துள்ளனர். இந்தப் பாலம் தான் மேய்ச்சல் நிலத்­துடன் மேட்டுப் பகு­தி­களை இணைத்­தது என டெமி­ரோரென் செய்தி முகமை தெரி­விக்­கி­றது.

பலஹோர் ஓடையின் குறுக்கே இருந்த இந்தப் பாலத்தை கடந்­த­வாரம் கூட பார்த்­த­தாக மக்கள் கூறி­ய­தாக ஊடக செய்­திகள் தெரிவிக்கின்றன. இது பாலம் குறித்த சந்­தே­கத்தை மேலும் வலு­வ­டையச் செய்­கி­றது.

பழங்­கால பொக்­கி­ஷ­மான இந்தப் பாலம் மாய­மா­னதை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்ளப் போவ­தில்­லை­யென துருக்கி அரசு தெரிவித்துள்­ளது. இந்தப் பாலம் தொடர்­பான விரி­வான விசா­ர­ணைக்கு துருக்கி அரசு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக டெய்லி சபா செய்­தித்தாள் தெரி­விக்­கின்­றது.

ஊட­கங்­களில் செய்தி வரும் வரை பாலக் கொள்­ளை­யர்கள் குறித்து நாங்கள் கேள்­விப்­பட்­ட­தில்லை எனறு ஊர் பெரி­யவர் டோகன், விசா­ரணை அதி­கா­ரி­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

பாலம் இடிந்து விழுந்து இருக்­கி­றது. பாலத்தின் கற்கள் காணமால் போய் உள்­ளன என்­ப­துதான் பெரும்­பா­லான கிராம மக்­களின் கருத்­தாகவுள்­ளது.

கருங்­கடல் பகு­தியில் உள்ள பள்­ளத்­தாக்­கு­களில் திடீர் வெள்ளம் அவ்­வப்­போது ஏற்­படும். கடந்த வாரங்­களில் லேசான மழை பெய்து இருந்­தாலும், இந்த பாலத்தின் கற்­களை அடித்து செல்ல இதுவே போது­மா­ன­தாக இருந்­தி­ருக்­கி­றது.

அதா­வது, இந்த பாலத்தின் கற்கள் வெள்­ளத்தில் அடித்துச் செல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என்ற கருத்தும் உள்­ளது.

மேய்ச்சல் பகு­தி­யான இந்த இடத்தில் இது­போல பழ­மை­யான நிறைய கற்­பா­லங்கள் வெள்­ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.