எம்.எப்.எம்.பஸீர்)

கொலைசதி  விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு இன்று  இரகசிய பொலிஸார் முன் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு ஆஜராகவில்லை. 

தனது மகனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக தன்னால் இவ்வாறு விசாரணைக்கு சமூகம் தர முடியவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சி.ஐ.டி.க்கு எழுத்து மூலம் தனது சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார்.