(இரோஷா வேலு) 

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனமாமொன்றுக்கு 2372 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்படவுள்ளமைத் தொடர்பில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்தை எதிர்த்து இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முறைப்பாடொன்றை கையளித்திருந்தது. இம்முறைப்பாட்டை கையளித்துவிட்டு, அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க கூறுகையில்,

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவென இந்திய நிறுவனமாமொன்றினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாடசாலை சீருடைகளுக்கு வழங்கப்படவுள்ள காசோலை தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூட்டிணைந்து அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரமோன்றை சமர்பித்துள்ளனர். 

இந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று வழங்கப்படவுள்ள காசோலை ஊழலான வகையிலேயே வழங்கப்படவுள்ளது. இது தரமற்ற ஒரு இறக்குமதிக்காக இந்நிறுவனங்களுக்கு வழங்கமுற்படுவது இவர்களுக்குள்ளும் இது தொடர்பில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சிந்திக்க தூண்டுகிறது