(ஆர்.விதுஷா)

இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் சாத்தியமற்ற விடயமாகும். அத்துடன் 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் அல்ல அதனைத் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அபிவிருத்தி பாதையில்  இட்டு செல்வார்கள் என்று   சுற்றாடல் பிரதி அமைச்சர் அஜித் மானபெரும தெரிவித்துள்ளார். 

அரச தகவல் திணைக்களத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,    

நல்லாட்சி அரசாங்கமானது  நாட்டில் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களினூடாக நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கின்றது.  அதற்கு சாதகமான வகையில் பாராளுமன்ற உறுப்பினர்ள்  225 பேரும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல  ஒத்துழைக்க வேண்டும் .