மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரவுநேர காவலாளி மர்மமான முறையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இரண்டு பிள்ளைகளின் தந்தையானா சோ .சுகுமாரன் 50 வயது  மதிக்கத் தக்க  காவலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

ஸ்தலத்திற்கு விரைந்த குற்ற தடயவியல் பொலிஸார் முதற் கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் திடீர் மரண விசரணை அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.