சீன பிரஜை  ஒருவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு மீட்கப்பட்ட சீன பிரஜை 43வயது மதிக்கத்தக்கவர் என்பதும் குறித்த சடலம் வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்  மல்பேரியா- படிகம பகுதியில் தென் அதிவேக வீதி திட்டத்தில் பணிபுரியும் நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கடமைக்கு வராத நிலையில் அவருடன் தொழில் புரியும் ஒருவர் அவர் தங்கியிருந்து இடத்திற்கு சென்ற நிலையில் அவர் சடலமாக இருப்பதைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதோடு சீன பிரஜை உயிரிழந்தமைக்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.