நிஷாந்த ரணதுங்கவிற்கு கடுவெல நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலைசெய்துள்ளது.

சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்‌ஷ உட்பட நால்வருக்கு நேற்று முன்தினம் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில் இன்று நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.