(ப.பன்னீர்செல்வம்) 

இந்தியாவுடன் "எட்கா" உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்களின் தொழிலும் பறிபோகும் ஆபத்து உள்ளதாக தெரிவத்த வாசுதேவ நாணயக்கார" எட்கா " உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காகவே  எம்.பி, இந்தியா எமக்கு தாரளமாக கடன்களை வழங்குகின்றது  என்றும்  குறிப்பிட்டார். 

இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி விபரிக்கையில், 

அரசாங்கத்திற்கு இந்தியா ஆரம்பக் கட்டத்தில் 700 மில்லியன் ரூபா  கடனை வழங்கியது. தற்போது   மேலும் 700 மில்லியன் ரூபாவை அரசுக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு தாரளாமாக கடன் வழங்குவதன் பின்னணியில் இந்தியாவின்  பெரும் தேவையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான  அவசியம் இருக்கலாம். 

அதாவது " எட்கா " தொழில்நுட்பவியல் மற்றும் வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கான அடித்தளமாக இருக்கலாம். இந்த உடன்படிக்கை இலங்கைக்கு சாதகமானதல்ல. ஏனென்றால் இந்தியாவிலிருந்து இங்கு தொழில்நுட்பத்திற்கு வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உட்பட பல்வேறுபட்ட தெழிலாளர்கள் வருவார்கள். இதனால் எமது நாட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போகும்.  வேலையில்லாப் பிரச்சினை நாட்டுக்குள் தலைதூக்கும். 

எனவே எட்கா உடன்படிக்கை எமது நாட்டுக்கு ஆபத்தானதாகும். ஏற்கனவே இந்தியாவுடன் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலும் இலங்கைக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. இந்த உடன்படிக்கை செய்து கொண்டதால் தமிழ் ஊடகவியலாளர்களின் தொழிலும் பறிபோகும் ஆபத்துள்ளது. 

  எமது நாட்டின் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு தாரைவார்ப்பதாக அமையக்கூடாது என்றார்.