ஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அந்நாட்டு ஜனாதிபதி அபட் ரப்போ மன்சூர் ஹாதி. புதிய பிரதமராக தெரிவு செய்தார்.

இதனையடுத்து  கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அஹமத் ஒபைட் பின் டக்ர் பிரதமராக செயலாற்றி வந்தார்.

ஏமன் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரழிந்து வருவதாக பெரும்பாலான மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்கள் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வீக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ ஜனாதிபதி அபட் ரப்போ மன்சூர் ஹாதி நேற்று அவரது பிரதமர் பதவியிலிருந்துஅதிரடியாக நீக்கியுள்ளார். 

இதனையடுத்து அவருக்குப் பதிலாக 38 வயதான மயீன் அத்துல் மலேக்-ஐ புதிய பிரதமராக நியமித்துள்ளதோடு சலேம் அஹமது சயீத்தை துணை பிரதமராக நியமித்துள்ளார்.

சமீப காலங்களாக அரசின் பொருளாதாரம் மற்றும் சேவைத்துறைகளில் அலட்சியமாக செயல்பட்டதால் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.