பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகன் ஒருவர் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்ததுடன், கையிலிருக்கும் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

10 விநாடிகள் ஓடும் அந்த காணொளிப் பதிவில் முன்னாள் எம்.பி.யின் மகனான அஷஷ் பாண்டே பெண்கள் கழவறைக்குள் நுழைவதற்கு முற்பட, அதற்கு ஒரு பெண் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதற்கு பாண்டே அந்த பெண்ணை தகாத வார்த்தகைளினால் திட்டித் தீர்த்ததுடன், கையிலிருக்கும் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்துகிறார்.

ஒரு கட்டத்தில் பாண்டேவுடன் வந்திருந்த நண்பர்களும் ஹோட்டல் ஊழியர்வளும் அவர‍ை அங்கிருந்து அழைத்து செல்வதுபோன்று குறித்த காணொளிக் காட்சியில் பதவாகியுள்ளது.

இந் நிலையில் அக் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பாண்டேவின் செயல் சமூக பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. 

இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல் துறை, ஆயுதங்கள் தடுப்புச் சட்டத்திற்குக் கீழ் பாண்டே மீது வழக்குத் தொர்ந்துள்ளதுடன் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.