யாழ்ப்பாணத்தில், 39 வருடங்களுக்கு முன்னர் மனைவியை புதைத்த இடத்தில் கணவனின் சடலத்தை புதைக்க சென்ற போது, அவரின் புடவை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த கணவனின் சடலத்தை புதைக்கச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதைக்கப்பட்ட மனைவிக்கு அணிவிக்கப்பட்ட புடவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், புடவை பழுதுபடாமல் அப்படியே இருந்தமையானது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும், 1979 ஆம் ஆண்டு சுகயீனம் காரமணாக உயிரிழந்த மனைவி, வசாவிளான் பகுதியிலுள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த அவரது கணவரை அடக்கம் செய்வதற்கு அவர்களது உறவினர்கள் குழி தோண்டினர்.

இதன்போது கல்லறையில் இருந்து அவரது மனைவிக்கு அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட புடவை கண்டெடுக்கப்பட்டது.

இந்த வியப்பான சம்பவம் உறவினர்களை பெரிதும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.