(எம்.எம்.மின்ஹாஜ்)

அவசர மின்துண்டிப்புக்கான தற்காலிக தீர்வினை காண்பதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் குழு இன்று முதற்தடவையாக கூடியது. இதன்படி அமைச்சர்கள் குழுவினுடைய  அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதியான செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதன்படி குறித்த குழுவினுடைய அறிக்கை திங்கட்கிழமை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் கையளிக்கப்படவுள்ளது. 

அவசர மின்துண்டிப்பு தொடர்பாக தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வினை முன்வைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்பிரகாரம் அமைச்சர்கள் குழுவில்  அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, சாகல ரத்நாயக்க, பிரதி அமைச்சர்களான எரான் விக்கிரமரத்ன மற்றும் அஜித் பீ.பெரேரா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இதன்படி அமைச்சர்கள் குழு முதற்தடவையாக நாளைய தினம் கூடியது. மேலும் இன்றைய தினமும் அமைச்சர் குழு கூடவுள்ளது. மின்துண்டிப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும், இதற்கு பிறகு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு நிரந்தர தீர்வும் ,மூன்று மாதகால அளவிலான குறுகிய கால தீர்வும் முன்வைக்கப்படவுள்ளது. 

இதற்கிணங்க அமைச்சர்கள் குழுவின் அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதியான செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.