பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியங்கள்ளி ஆண்டிகம வீதி கட்டக்காடு பிரதேசத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரை  தாக்கிய நால்வரை கைதுசெய்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர். 

பள்ளம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலத்தில்  பணியாற்றும் பொலிஸ்உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டவராவார்.   

பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் தனது மனைவி பிள்ளைகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கையில் கட்டக்காடு பிரதேசத்தில் வைத்து  லொறியினால் பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த காரை வழிமறித்து நிறுத்தியுள்ள சந்தேக நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் முன்னிலையில் தாக்கியதாக  பொலிஸ் உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொபெய்கனே பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியிருப்பதாகவும், அவர்களை  கைது செய்வதற்கான  விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் பள்ளம பொலிஸார் தெரிவித்தனர். 

பள்ளம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.