மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோக்ஹோம் தோட்ட பெரிய சோலகந்தை பிரிவை சேர்ந்த 33 வயதுடைய  வலது குறைந்த மன நோயாளியான நல்லையா ராம்குமாரை கடந்த 13ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்  நால்வரை 16ஆம் திகதி இன்று காலை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் சமீபத்திய காலமாக தனது நோய்க்காக மருத்துவம் பெற்று வந்துள்ளமையால் இந்த மரணத்தில் சந்தேகம் இல்லை என பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட பரிசோதனையில்  குறித்த நபர் கொலை செய்யப்படமை உறுதி படுத்தப்பட்டது.

இக்கொலை சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின் பணிப்புரையில் உதவி பொலிஸ் அதிகாரி ஆனந்த மற்றும் பொலிஸார் அடங்கிய குழு இன்று காலை முதல் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.