‘ப்யார் ப்ரேமா காதல் ’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

 நடிகர் ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் ரஞ்த் ஜெயக்கொடியின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசுகையில்,‘

இது இரண்டு வெவ்வேறு தளங்களில் வாழும் இளைஞனும், இளைஞயும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும் காதல் கதை. அத்துடன் இது ஒரு பிடிவாதமான காதல் கதை என்றும் சொல்லலாம். நாயகன் ஹரீஷ் பைக் ரேஸ் ப்ரியர் மற்றும் குத்துச்சண்டை வீரரும் கூட. இவர் தனக்கு பொருத்தமேயில்லாத நவநாகரீக உலகில் வாழும் ஷில்பா மஞ்சுநாத் மீது காதல் வருகிறது.இந்த காதல் இணைந்ததா? இல்லையா? என்பதே திரைக்கதை. இரண்டு நேர்எதிர் துருவங்களில் பயணிக்கும் இன்றைய நவீன இளைய தலைமுறையினர் காதலால் ஒன்றிணைய முடிகிறதா? இல்லையா? என்பதை சற்று வித்தியாசமான கோணத்தில் விபரித்திருக்கிறேன்.‘ என்றார்.

இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை இயக்கியவர் என்பதும், நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஏற்கெனவே காளி படத்தில் விஜய் அண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் என்பதும், நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக் பொஸ் சீஸன் =1 மூலம் புகழ் பெற்றவர் எனபதும் குறிப்பிடத்தக்கது.