வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கதிராமன் மகேஸ்வரன் (வயது 52) எனும் 4 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சந்திவெளி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த நபர் சைக்களில் சென்றுகொண்டிருந்தபோது தனியார் பஸ்ஸுல்  மோதுண்டு படுகாயமடைந்தனர்.

அதன்பின்னர் உடனடியாக சிகிச்சைக்காக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

எனினும் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இச் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸுன் சாரதியை கைதுசெய்துள்ளனர்.