(எம்.நியூட்டன்)

மக்களுக்குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் அமைச்சர்களின் இழுபறியினால் கிடைக்காது போய்விடும் என்பதனால் சில விடயங்களை ஜனாதிபதிமுன்னிலையில் கூறியது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் இதன் காரணமாக சிலர் என்னுடன் முரண்படுகின்றார்கள். நான் தனி நபரை மையப்படுத்தி எதையும் கூறுவதில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமை்பபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கேள்வி : அமைச்சர் மனேகணேசன் உங்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் கேட்டபோது?

நான் பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக  உள்ளேன். இந்தக் குழுவில் பல கலந்துரையாடல்களின் போது நான் கூறிய கருத்து வீடமைப்புத் திட்டம் தொடர்பில் குறித்த விடயம் ஒரு அமைப்பில் மட்டும்தான் இருக்கவேண்டும் இதனை  நான்  பலதடவை கூறியுள்ளேன்  சமூர்த்தி  எந்த அமைச்சில் உள்ளது என்பது பலருக்குத் தெரியாதுள்ளது. பல அமைச்சுக்கள் உள்ளது. 

அமைச்சர் மனோகணேசனுடன் எந்தக் காலத்திலும் மோதியது கிடையாது கஜேந்திர குமாருடனோ, முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனோ, சுரேஷ் பிரேமச்சந்திரன் உடனே மோதியது கிடையாது. 

அமைச்சர் மனோகணேசன் கூறுவதைப் பார்த்தால் நான் வேண்டுமென்று அவர்களுடன் மோதுவதாக கூறுகின்றார் . அவ்வாறு நான் நடந்ததில்லை. வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் அவர் செய்த நல்ல விடையங்கள் பற்றியும் ஊடகங்களுக்கு கூறியிருந்தேன். அவர் ஒரு பகுதியில் வெற்றியடைந்துள்ளார் மற்றொரு பகுதியில் தோல்வியடைந்துள்ளார். 

ஆகவே நான் கூறுகின்ற விமர்சனங்கள் ஒரு விடையத்தைப் பற்றியதாகவே இருக்கின்றதே தவிர ஒரு தனி நபரை மையப்படுத்தி எதனையும் சொன்னது கிடையாது.