எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் கடந்த வாரம் 13 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் நண்பனான 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த கொலை இடம்பெற்ற தினமான கடந்த புதன்கிழமை பாடசாலையில் தவணை பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தமையினால் மாணவர்களுக்கு வழமையான நேரத்தை விட முன்னதாகவே பாடசாலை முடிவடைந்தது.
இதன் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுவனும் அவனது வகுப்பிலுள்ள சக மாணவனான நண்பனும் கிளி பிடித்து விளையாடுவதற்காக பாடசாலைக்கு அண்மையிலுள்ள பிரதேசத்திற்கு சென்று கிளி பிடித்து விளையாடினர்.
அதனை தொடர்ந்து இருவரும் கிளி ஒன்றை பிடித்து அதற்காக சண்டைபோட்டுள்ளனர்.இதன் போது கொலை செய்யப்பட்ட மாணவனை அவனுடன் சென்ற சக மாணவன் புத்தக பையின் பட்டியால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கிணற்றில் தள்ளிவிட்டுள்ளான்.
மேலும் சம்பவம் தொடர்பில் கொலையுடன் தொடர்புடைய சிறுவனும் அவனது தந்தையும் கைது செய்யப்பட்டதுடன் பின்னர் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM