(ரி.விரூஷன்)

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென  நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.