இலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம் சுமத்தியுள்ளது. 

இரண்டு சரத்துக்களை மீறியமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி.யின் விசாரணைகளுக்காக ஆதரவளிக்காமை அல்லது மறுப்பு தெரிவித்தமை மற்றும் விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்தியமை அல்லது விசாரணைகளை காலத்தாமதப்படுத்தியமை  ஆகியனவே சனத் ஜயசூரியாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.

இந்நிலையில், ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 14 தினங்களுக்குள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.