இன்று இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் உறுப்பினா்கள் இருவரும் தத்தமது வாதங்களை சபையில் முன்வைத்து உரையாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வு இன்று, தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமானது. 

சபையில் அகில இலங்கை மக்கள காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹம்சா ஒலுவில் கடலரிப்பை தடுப்பதற்கு நிரந்தரமான தீர்வினை வலியுறுத்தி பிரேரனை ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென தவிசாளிரிடம் வேண்டுகோள் விடுத்தாா். 

இதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் தமீம் ஆப்தீன் துறைமுகத்தில் குவிந்துள்ள மணலை அகற்றி மீனவர்களினது ஜீவனோபாயத்தை வழங்குவதற்கு உதவுமாறு சபையில் பிரேரனையொன்றை முன்வைத்தாா். 

ஒலுவில் பிரதேச கடலரிப்பை தடுப்பதற்கு உடன் நடவடிக்கை அவசியம் ஏற்பட்டுள்ள அதேவேளை மீனவர்களது பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப் பட வேண்டுமெனவ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் bjupவித்தாா். 

இதனைத் தொடா்ந்து முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் உறுப்பினா்கள் இருவரும் தத்தமது வாதங்களை சபையில் முன்வைத்து எதிரும் புதிருமாக முன்வைத்தனர். 

தற்போது ஒலுவில் பிரதேச மக்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு பேச்சுவாா்த்தை ஏற்படுத்தப் படாமல் இரு தரப்பினரையும் மோதல் ஒன்றுக்கான சூழ்நிலையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.அமீன் சபையில் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ள நிலையில் மீனவர்களினதும், ஒலுவில் மக்களினதும் போரட்டம் இரு வாரங்களுக்கு மேலாக முன்னெடுத்துச் செல்லப் படும் அவலம் இன்று காணப்படுகின்றது. 

இவ்வாறான நிலை நீடிக்குமாயின் வீண் மோதல்களும், இரு சாராருக்குமிடையில் கசப்புணர்வுகளுமோ தோன்றுவதற்கு வழி சமைக்கும். 

எனவே பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும், கட்சி, பிரதேச வேறுபாடுகள் பார்க்காது இரு தரப்பினருக்கும் காத்திரமான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.