தேசிய பிரச்சினையின் தீர்வுக்காகவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவினோம் - சம்பந்தன்

Published By: Vishnu

15 Oct, 2018 | 03:52 PM
image

தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம். அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்ற முடியாது. புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவேண்டிய தேவையிருக்கின்றது என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொதுச்சந்தை கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்றங்கள் சட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவையினை வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.  உள்ளுராட்சி மன்றங்கள் பாரிய சேவையினையாற்றும் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அந்த மக்களின் தேவையினை நிறைவேற்றக் கூடிய முயற்சிகளை எடுக்கவேண்டும்.

அரசியலில் எப்போதும் பேதங்கள் இருக்கும், அரசியலில் எப்போதும் கருத்துவேறுபாடுகள் இருக்கும்.என்னவிதமான வேறுபாடுகள், கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் எமது மக்களுக்கு உண்மையாக சேவையாற்றுவதாக இருந்தால் நாங்கள் ஒன்றுபட்டு எங்களுக்குள்ள பேதமைகளை பயன்படுத்தாமல் அவற்றினை மறந்து மக்கள் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை ஒன்றுபட்டு மேற்கொள்வதன் மூலமே மக்களுக்கு உண்மையான சேவையினை வழங்கமுடியும்.

நாங்கள் அபிவிருத்திகளையும் அதிகாரங்களையும் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வரவேண்டும், புதிய அரசியல்சாசனம் உருவாக்கப்படவேண்டும். ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும். அதன்மூலமாக எமது இறைமை மதிக்கப்படவேண்டும், எமது இறைமை மதிக்கப்படுவதன் ஊடாக எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் சுயாதீனமாக வாழக்கூடிய மக்களாக கருதப்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22