மட்டக்களப்பு- தொப்பிகல வனப்பகுதிகளில்   சட்டவிரோதமாக  தேக்கு மரங்களை வெட்டி விற்பனைக்காக  கொண்டுசெல்லப்பட்டபோது   பெரும் எண்ணிக்கையிலான தேக்கு மரக்குற்றிகளுடன் கைதுசெய்யப்பட்ட சாரதிகள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.     

சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டபோது கடந்த சனிக்கிழமை 13 ஆம் திகதி கைது செய்யப்பட  உழவு இயந்திரங்களின் மூன்று சாரதிகளும்; ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூன்று உழவு இயந்திரங்களிலும் சுமார் 6 தொடக்கம் 16 அடி நீளமான 85  மரக்குற்றிகள் காணப்பட்டன.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வந்தாறுமூலை ரயில் கடவைப் பகுதியில் பதுங்கியிருந்த பொலிஸ் குழுவொன்று மரக்கடத்தலை முறியடித்து ஆட்களைக் கைது செய்ததோடு மரங்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.