(எம்.மனோசித்ரா)

நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை செவ்வாய்க்கிழமை கூடவுள்ளதுடன், அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒற்றுமை பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.