சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள்  மாநாட்டினை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபிய பத்திரிகையாளரான 59 வயதுடைய ஜமால் கசோக்கி, சவுதி அரேபியால் இடம்பெற்று வரும் மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்ததுடன் ஏமனில் சவுதி அரசாங்கம் நடத்தும் கூடுப்படை வான் தாக்குதல்களையும் கடுமையாக கண்டித்து வந்தார்.

இந் நிலையில் அவர் கடந்த 2 ஆம் திகதி துருக்கியின், தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத்  தூதரகத்திற்குள் நுழைந்து மாயமாகிவிட்டார். அவர் குறித்த தூதரகத்தின் கட்டடத்தின் முக்கிய வாயிலினுள் நுழைந்துள்ளதை பலரும் பார்த்துள்ளனர். அதன்பின் அவருக்கு என்ன ஆனது என்பது உறுதிப்படத் தெரியவில்லை.

ஆகயைினால் தூதரகத்திற்குள் வைத்திற்குள் வைத்து சவுதி அரேபிய முகவர்களினால் அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் அந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து விட்டது.

ஆகவே இந்த விவகாரத்தினால் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், ஜமால் கசோக்கி கொல்லப்பட்டிருந்து அதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்றால், அந்த நாட்டினை கடுமையாக தண்டிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது.

இந்த மாநாட்டினை அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் ஆதரவாளர்கள் பலரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ள நிலையில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டினை புறக்கணிக்க நடவடிக்க‍ை எடுத்துள்ளனர். 

இந்  நிலையில் காணாலம் போன ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியை தொடர்பான விசாரணைகளை சவுதி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.