வவுனியாவில் இன்று  காலை ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று காலை ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த போது மாடு குறுக்காக வீதியின் நடுவே பாய்ந்துள்ளது.

இதன்போது குறித்த இளைஞன் பின்னாள் வந்த பஸ் ஒன்றுடன் மோதியபோது விபத்து இடம்பெற்றுள்ளது இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞர் யார் ? எங்கிருந்து வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ? என்பது குறித்த விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். .

தற்போது இளைஞனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.