மேலும் தாழிறங்குகிறது அட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதி

Published By: Vishnu

15 Oct, 2018 | 10:54 AM
image

அட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஏற்பட்டிருந்த வெடிப்பினால் நிலம் முற்றாக தாழிறங்கி நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் 6 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அட்டன் தொடக்கம் பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடையை நோக்கி செல்லும் இந்த பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இந்த நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு மேற்புறமாக உள்ள இந்த பிரதான வீதி சுமார் 12 அடி தாழிறங்கி வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று அதிகாலையில் வெடிப்புற்றிருந்த இந்த பிரதான வீதி ஓரம் முற்றாக தாழிறங்கி, மேலும் அப்பகுதியில் நிலங்கள் தாழிறங்கி வருவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அட்டனிலிருந்து நோர்வூட் வழியாக பொகவந்தலாவ, பலாங்கொடை ஆகிய பகுதிகளுக்கும் நோர்வூட்டிலிருந்து மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்து தடையால் அசௌகரியங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53