எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முச்சக்கர வண்டிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் இன்று முதல் இரண்டாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சாரதிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இன்று முதல் மேல் மாகாணம் மற்றும் தென்மாகாணங்களில் மாத்திரம் இரண்டாவது கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதாக சுயவேலைவாய்ப்பு ஊழியர்களின் முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.