களுத்துறை மாவட்ட தமிழ் இளைஞர்களை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சமூக அமைப்பான “ மக்கள் நீதி மன்றம்” தனது அங்குரார்ப்பண கூட்டத்தினை இங்கிரியவில் நேற்று சனிக்கிழமை நடத்தியது.

மன்றத்தின் தலைவராக ஊடகவியலாளர் ஆர் சிவராஜா தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக கே உதயகுமார் பொருளாளராக செல்வராஜ் , உபசெயலாளராக டி .தேவநாதன் தேசிய அமைப்பாளர் எஸ்.விமலனேசன் உபதலைவர் ஏ .பிசிவபெருமாள் ஊடக செயலாளராக மணி ஸ்ரீகாந்த் ஆகியோரும் நிறைவேற்றுக் குழுவில் 10 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்

இயக்கத்தின் மாநாட்டை விரைவில் நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
