(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் நாளை இடம்பெறவுள்ளது. 

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் மற்றும் கூட்டு கமிட்டி சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளன. 

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அடிப்படை சம்பளத்தை 15 வீத்தத்தால் அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனத்தால் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.