அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 21 வயதான செய்யானே பெர்ரி என்ற பெண்ணுக்கு உணவின் வாசனை மற்றும் குளியல் சோப் அல்லது சலவை சோப்பின் வாசனை உள்ளிட்டவை என்றால் ஒவ்வாமை உள்ளது.

13 வயதில் தாக்கிய இந்த நோயானது இவரை பாதியிலேயே பாடசாலையில் இருந்து வெளியேற வைத்துள்ளது.

இதுமட்டுமின்றி உணவுகளை திரவமாக மாற்றியே குழாயால் அவருக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

குறித்த இப்பெண், நோயின் தாக்கத்தினால் சுமார் 3 ஆண்டுகளாக அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒரு துண்டு கூட அவரால் சாப்பிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இவரது இந்த நிலையால் செய்யானேவின் பெற்றோர் மிகவும் கவலையுற்றுள்ளதோடு, குடியிருப்புக்கு வெளியே சமையலறை ஒன்றை உருவாக்கி அதில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனராம்.