யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கு தொடர்புடைய என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாக குழுவொன்று மர ஆலை ஒன்றில் பணிப்புரியும் இளைஞன் மீது தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றிருந்தது.

இதன் போது சந்தேகத்துக்குறியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே கொக்குவில் பகுதியை சேர்ந்த இவர்கள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.