சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மற்றுமொரு சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
செகண்ட்ராபாத்தைச் சேர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நடிகையுமான கே . நிரோஷா என்ற 23 வயதுடையவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் ஜெமினி தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும் அக்காதல் கல்யாணம் வரை நிச்சயிக்கப்பட்டு, இன்னும் ஒரு மாத காலத்தில் திருமணம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளமையானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதே நேரம் நிச்சயிக்கப்பட்ட காதலர் நள்ளிரவு 12 மணியளவில் நிரோஷா தன்னிடம் ஸ்கைப்பில் சண்டை போட்டார் என்றும் தற்கொலை செய்யப் போகிறார் என்றும் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.
எனினும் பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கும் போது நிரோஷா இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த விடுதி அறையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சாய்பிரசாந்த் இறந்து மூன்று தினங்கள் கூட முடிவடையாத நிலையில் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரத்தின் தற்கொலை சினிமா மற்றும் சின்னத்திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM