நோர்வுட்  நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழிறங்கியமை மற்றும்  மண்சரிவு அபாயம்  ஏற்பட கூடியதாகவுள்ளமையினாலும்  ஹட்டன் மஸ்கெலியா பிராதான வீதி மூடபட்டுள்ளமையாலும் பயணிகள் மற்றும் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.இந்நிலையில் பொகவந்தலாவ,மஸ்கெலியா மற்றும் சாமிமலை ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்ற பயணிகள் நோர்வுட்  பகுதியில் இறங்கி  மாற்றுவழியின் ஊடாக  சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை நடந்து கிளங்கன் பகுதியில் சென்று ஹட்டன் பகுதிக்கு செல்வதற்கான பஸ்களில் மீண்டும் பயணிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.இதேவேளை இன்று பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து கர்பிணி  தாய் ஒருவரை அம்பியுலன்ஸ் வண்டியின் மூலம்  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாது மிகுந்த சிறமத்திற்கு மத்தியில் கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அத்தோடு தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதால் குறித்த பகுதி மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.