இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இங்கிலாந்தை பணித்தது.

அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபதுக்கு 20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த 10 ஆம் திகதி தம்புள்ளை, ரங்கிரி சரிவதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் இங்கிலாந்து அணி, 15 ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது.

இந் நிலையில் இன்று இடம்பெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியும் தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை  ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.