சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை சிகரெட்டுகளை  கடத்திவர முற்பட்ட சீன பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சீனாவை சேர்ந்த 35 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் இன்று காலை சீனாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த சீன பிரஜையின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள்  அவரை   சோதனையிட்டபோது 6 இலட்சம் ரூபா பெறுமதியான  12,000 சிகரெட்டுகள் அடங்கிய 60 சிகரெட் பக்கற்றுகளை கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டரை  மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக  விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.