அண்மையில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் காரணமாக அமைந்த நாமல்குமார என்பவர் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர் அல்ல என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வரக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த நாமல்குமார என்பவர் சுய விருப்பத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டங்களுக்கு உதவியளிப்பதற்காக விருப்பம் தெரிவித்து, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் கடந்த ஆண்டு தன்னார்ச உறுப்பினராக இணைந்து கேகாலை பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் செயற்பட்ட ஒருநபர் மாத்திரமே.

மேலும் குறித்த நபர் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக ஊதியம் பெறும் ஒரு ஊழியர் அல்ல என்பதையும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் பணியாற்றுபவர் அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்வதுடன்  அவர் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதைப் பற்றி கண்டறிவதற்காக ஏற்கனனே குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் ஊடக அறிக்கை வருமாறு,