(நா.தனுஜா)

பூகோள அபிவிருத்தி விரைவடைந்து வருகின்ற அதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பு, அதிக வட்டிவீதம், உயர் கடன்சுமை மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார யுத்தம் போன்ற காரணங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன என  நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையினை எதிர்கொள்வதற்கு விதிமுறைகளின் அடிப்படையிலான பூகோள வர்த்தக முறைமையை திருத்தி அமைப்பதற்கான அதிகாரத்தினை அடைந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பூகோள ரீதியில் அதிகரித்து வருகின்ற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட சவால்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜீ – 24 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கிடையிலான கூட்டத்தொடர் இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நடைபெற்று வருகின்றது. அங்கு உரையாற்றுகையிலேலே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.