(ஆர்.யசிஇ எம்.ஆர்.எம்.வசீம்)

உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக செயற்படும்  நலின் பெரேராவை  பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியினால் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயர் தெரிவித்துள்ளார். 

பிரதம நீதியரசரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ள  நிலையில் புதியதாக பிரதம நீதியரசர் நியமனம் குறித்து  ஆராய இன்று நண்பகல்  அரசியல் அமைப்பு பேரவை கூடி தீர்மானம் எடுத்தது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய இந்த அரசியல் அமைப்பு பேரவையில்   பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தவரை தெரிவுசெய்வதற்கு பேரவையின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக செயற்படும்  நலின் பெரேராவை  பிரதம நீதியரசராக நியமிக்க  அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.