(ஆர்.யசிஇ எம்.ஆர்.எம். வசீம்)

"சுதந்திர போராட்டமானது அரசியல்  அமைப்பிற்குள் உட்பட்டதாகவே  இருக்க வேண்டும். சட்டத்துக்குள் செயற்பட்டு தமது இலக்கை அடைய வேண்டும். இதில் மகாத்மா காந்தியின் போராட்டம் இலங்கைக்கு மட்டும் அல்ல முழு உலகுக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டு" என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனனதினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"மகாத்மா காந்தியின் வழிநடத்தல் உலக நாடுகள் அனைத்துக்குமே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.  அறவழியில் இலக்கை அடையும் போரட்டமே இந்த அகிம்சைவழி போராட்டமாகும். சகல வன்முறைகளிலும் இருந்தும் நீங்கி சத்தியாக்கிரகம் மூலமாக உண்மையை வெற்றிகொள்ள வேண்டும். அறவழி நடவடிகைகளில் மக்கள் ஈடுபட வேண்டும் அதுவே மாற்றத்தின்  காரணியாக அமைய வேண்டும் என்பதை காந்தி கையாண்டார். சுய இராஜியத்தை அடைய அவர் இந்த குறிக்கோள்களை  பின்பற்றினார். வெற்றியும் கண்டார்."  என தெரிவித்தார்