இங்கிலாந்து அணியினர் தங்களால் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கவேண்டும் என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இலங்கை அணியினருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் ரூட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டுவந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறனை கொண்டது சுழற்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான ஆடுகளங்களில் அதனால் துடுப்பெடுத்தாட முடியும் என்பதை மீண்டும் நிரூபிப்பதற்கான வாய்ப்பே இலங்கையுடனான தொடர் எனவும் ரூட் தெரிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளாகளை சிறப்பாக எதிர்கொள்வதற்கு இங்கிலாந்து மைதானங்களிற்கும் இலங்கை மைதானங்களிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இலக்கொன்றை துரத்துவதற்கும் இலக்கொன்றை நிர்ணயிப்பதற்கும் வித்தியாசமாக விளையாடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ரசீத்கானிடம் சில மர்மங்கள் உள்ளன இலங்கை ஆடுகளங்களில் உங்களால் அதனை காணமுடியும் எனவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
நீங்கள் முதன்முதலாக எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்து வீச்சாளரும் மர்ம பந்து வீச்சாளரே என குறிப்பிட்டுள்ள ஜோ ரூட் அவர் எப்படி பந்து வீசுவார் என்பது உங்களிற்கு தெரியாத நிலை காணப்படும் இதனால் நீங்கள் ஆட்டமிழக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM