இந்தியர்களின் பண்டிகை கொண்டங்களில் மிக முக்கியமானது தீபாவளி கொண்டாட்டம். இந்தியாவை தாண்டி உலகெங்கும் உள்ள இந்தியர்கள் இதை மிகவும் விமர்சையாக கொண்டாடுவார்கள், அதுவும் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.சிங்கப்பூர் அரசாங்க உதவியுடன் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே சிங்கப்பூரில் தீவு முழுவதும் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். அதுவும் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன

அன்றைய தினம் சிங்கப்பூரில் அரசு விடுமுறை நாள். மாதம் முழுவதும் சிங்கப்பூரின் அனைத்து சமூகமன்றங்களிலும் தீபாவளி கொண்டாடப்படும், அதில் அனைத்து சமூக மக்களும் கலந்துகொள்வார்.

சிங்கப்பூர் அரசின் பிரதமர் அல்லது அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் லிட்டில் இந்தியா கடை பகுதிகளில் தீபாவளிக்கு முன்பாகவே பெரும்பாலான தமிழர்கள் கூடி கொண்டாடுவார்கள். லிட்டில் இந்தியா சாலைகள் எங்கும் தீபாவளி பண்டிகையை வரவேற்க வண்ண விளக்கு அலங்காரங்களுடன் ஜொலிக்கும், சாலையின் நடுவே கண்ணைப் பறிக்கும் தீபாவளி அலங்கார வளைவுகளுடன். சிங்கப்பூரில் உள்ள பிரதான மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்கள், பேரூந்து மற்றும் பேரூந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள், குறிப்பாக லிட்டில் இந்தியா கடை பகுதிகள் தீபாவளி கொண்டாட்டத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்படும்.குறிப்பாக அனைத்து இடங்களிலும் வாழ்த்துச்செய்திகள் தமிழில் இடம்பெறும் லிட்டில் இந்தியா வியாபாரிகள் மற்றும் கலாசார (LISHA) அமைப்பு பல சிறப்பு கொண்டங்களை ஒவ்வரு ஆண்டும் ஏற்பாடு செய்வதுண்டு.