2016 ஆம் ஆண்டிலிருந்து 13 வயதுடைய சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை தொடர்பில் 70 வயது முதியவர் ஒருவரை நேற்று கைதுசெய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டியாவள பிரதேசத்தைச் சேர்ந்த முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த சிறுவனின் பெற்றோர் பிரிந்து வாழ்வதால் 2016 ஆம் ஆண்டில் இச்சிறுவன் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்துள்ளான்.
இந்நிலையில் விடுமுறையில் இச்சிறுவன் தனது தாயைப் பார்க்க வீட்டுக்கு வந்த போது சந்தேக நபரான முதியவர் முதல் தடவையாகவும், அதன் பின்னர் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது தாயைப் பார்க்க சிறுவன் வந்த போது அச்சிறுவனை அச்சுறுத்தி வீட்டுக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று இரண்டாவது தடவையாகவும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு இதனை யாருக்கும் சொல்ல வேண்டாம் என சிறுவனை அச்சுறுத்தியிருப்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் பொரளையிலுள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது தன்னை முதியவர் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விடயங்களை உறவினரிடத்தில் கூறியுள்ளதோடு அந்த உறவினரால் இது தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த முதியவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான முதியவருக்கு பிள்ளைகளும், அவர் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனின் வயதையொத்த பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM