பிரித்தானியாவை சேர்ந்த ஒரு தாய் குழந்தை பெற்றெடுத்தது முதல் தினமும் 20 முறைக்கு மேல் வாந்தி எடுப்பதால் உடல் எடை இழந்து மிகவும் பரிதாபமாக காணப்படுகிறார்.


இங்கிலாந்தை சேர்ந்த, 20 வயதுடைய டேன்னர் என்பவர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சியான்னா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதிலிருந்து அவர் உணவு எடுத்துக்கொண்டாலே அது அடுத்த சில நிமிடங்களில் வாந்தியாக வெளிவந்துள்ளது.

இது நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவருடைய உடல் எடை குறைந்து, எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவரை போல் காணப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் என்ன நோய் என்பதையே கண்டறிய முடியாமல் திகைத்துள்ளனர்.

நான் இப்போது என்னுடைய உயிரை தக்கவைத்துக்கொள்வதற்காக தினமும் 12 மாத்திரைகள் சாப்பிடுகிறேன். அது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது அவரின் குடும்பத்தாரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.