அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் துறைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி விபத்துக் காரணமாக இரு பஸ்களிலும் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.